×

செங்கோட்டையில் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ முன்னிலையில்மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்

செங்கோட்டை: செங்கோட்டையில் வடக்கு மாவட்டச் ெசயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். செங்கோட்டையில் உள்ள வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடந்தது. இதில் வடக்கு மாவட்டச் ெசயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ முன்னிலையில் வடகரை பேரூர் மனித ஜனநாயக கட்சி வாவை இனாயத்துல்லா, செய்யது அலி, முகமது ஷபீக் உள்ளிட்ட ஏராளமான மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். அனைவருக்கும் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் அதிமுக தென்காசி மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆர். ராமச்சந்திரன், துணைச்செயலாளர் முகமது ஹனீபா, சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட இணைச்செயலாளா் ஞானராஜ், எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைச்செயலாளா் ஜாஹீர் உசேன், மாவட்டப் பிரதிநிதி வடகரை சப்பாணி,  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Krishnamurali ,MLA ,Red Fort ,AIADMK ,
× RELATED செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில்...