குவியும் சுற்றுலாப் பயணிகளால் கும்பக்கரை அருவியில் ‘ரஷ்’

பெரியகுளம்: பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வட்டக்கானல் மற்றும் கொடைக்கானல் பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் அருவிக்கு நீர்வரத்து உள்ளது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் நீர்நிலைகளை நாடி வருகின்றனர். மேலும், கடந்த மாதம் 31ம் தேதி முதல் பள்ளிகளில் பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில், மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், கும்பக்கரை அருவியில் குடும்பம், குடும்பமாக சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர் .வார விடுமுறை நாட்களில் 200 முதல் 300 வரையிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் குறைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு கும்பக்கரை அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை வெப்பத்தை தணிக்க குவிந்தனர். நேற்று அதிக சுற்றுலா பயணிகளின் வருகையால் கும்பக்கரை அருவியில் உள்ள நீர்த்தேக்கம் மற்றும் நீர்வீழ்ச்சி பகுதிகளில் களைகட்டியது.

Related Stories: