×

காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை

ஆட்டையாம்பட்டி, ஜூன் 6: சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் அமைந்துள்ள கந்தசாமி கோயிலில்,  வளர்பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து ரோஜா, சம்பங்கி, மருவு, மரிக்கொழுந்து, அரளி, துளசி உள்ளிட்ட மலர், பல வகை கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மாலை அணிவித்து முத்தங்கி அணிவித்து வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு வள்ளி - தெய்வானையுடன் முருகன் பல்லாக்கில் திருவீதி உலா நடந்தது.

Tags : Kalipatti Kandasamy Temple ,
× RELATED சட்டமன்ற தொகுதி வாரியாக பதிவான...