திருப்புத்தூர் அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே மானகிரி தளக்காவூரில் உசுலாவடிகருப்பர், நாச்சியம்மத்தாள் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரியமாடு பிரிவில் 8 ஜோடிகள் பங்கேற்றன. அதில் கோட்டணத்தாம்பட்டியை சேர்ந்த ரவி மாடு முதல் இடத்தையும், பரளி செல்வி 2ம் இடத்தையும், சிவகங்கை அருண் 3ம் இடத்தையும், தேவகோட்டை மாணிக்கம் 4ம் இடத்தையும் வென்றனர்.சின்னமாடு பிரிவில் 15 ஜோடிகள் பங்கேற்றன. அதில் கம்பம் பெரியகருப்பன் மாடு முதல் இடத்தையும், ஏரியூர் பெத்தாச்சி 2ம் இடத்தையும், உஞ்சனை சாகி 3ம் இடத்தையும், மாங்குளம் தெய்வேந்திரன் 4ம் இடத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செலுத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories: