மாவட்டத்தில் நாளை 57 கிராம ஊராட்சிகளில் சிறப்பு முகாம்

தர்மபுரி, ஜூன் 6:  தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் 57 கிராம ஊராட்சிகளில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த 57 கிராம ஊராட்சிகளில், சிறப்பு முகாம் நாளை (7ம் தேதி) நடக்கிறது. இந்த முகாம்கள், தர்மபுரி வட்டாரத்திற்கு உட்பட்ட இலக்கியம்பட்டி, திப்பிரெட்டிஅள்ளி, கொண்டகாரணஅள்ளி, முக்கள்நாயக்கனஅள்ளி, கொண்டம்பட்டி, செட்டிக்கரை, நாய்க்கனஅள்ளி, நூலஅள்ளி மற்றும் சோகத்தூர் கிராம ஊராட்சிகளிலும், நல்லம்பள்ளி வட்டாரம் அதியமான்கோட்டை, ஏலகிரி, பாளையம்புதூர், மானிதஅள்ளி, ஏ.ஜெட்டிஅள்ளி, தடங்கம் மற்றும் தொப்பூர் கிராம ஊராட்சிகளிலும், காரிமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட ஜிட்டான்டஅள்ளி, அடிலம், பைசுஅள்ளி, பண்டாரஅள்ளி, திண்டல், பெரியாம்பட்டி, பிக்கனஅள்ளி, இண்டமங்கலம் மற்றும் ஜக்கசமுத்திரம் கிராம ஊராட்சிகளிலும் நடக்கிறது.

அதே போல், பாலக்கோடு வட்டாரத்திற்கு உட்பட்ட பெல்லாரஹள்ளி, ஜர்தலாவ், கும்மனூர், பஞ்சப்பள்ளி, ஏ.மல்லாபுரம், கம்மாலப்பட்டி மற்றும் எர்ரனஅள்ளி கிராம ஊராட்சிகளிலும், பென்னாகரம் வட்டாரத்திற்கு உட்பட்ட வட்டுவனஅள்ளி, பருவதனஅள்ளி, பிளியனூர் சின்னம்பள்ளி மற்றும் மஞ்சநாய்க்கனஹள்ளி கிராம ஊராட்சிகளிலும், ஏரியூர் வட்டாரத்திற்கு உட்பட்ட நாகமரை, தொன்னகுட்டஅள்ளி மற்றும் பந்தரஹள்ளி கிராம ஊராட்சிகளிலும், அரூர் வட்டாரத்திற்கு உட்பட்ட மோபிரிப்பட்டி, வேடகட்டமடவு, கொங்கவேம்பு, அக்ரஹாரம் மற்றும் செல்லம்பட்டி கிராம ஊராட்சிகளிலும், மொரப்பூர் வட்டாரத்திற்கு உட்பட்ட கெலவள்ளி, இருமத்தூர், கொங்காரப்பட்டி, தாசரஅள்ளி மற்றும் வகுரப்பம்பட்டி கிராம ஊராட்சிகளிலும் நடக்கிறது.

கடத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட தென்கரைகோட்டை, கேத்துரெட்டிப்பட்டி, ஒப்பிலிநாய்க்கனஅள்ளி மற்றும் பசுவபுரம் கிராம ஊராட்சிகளிலும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட சித்தேரி மற்றும் பொம்மிடி கிராம ஊராட்சிகளிலும் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்து கொள்ளும் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில் பட்டா மாறுதல், சிறு குறு விவசாயிகளுக்கான சான்று வழங்குதல், வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் விண்ணப்பம் பெறுதல், விவசாய கடன் அட்டை வழங்குதல், கால்நடை நலன் பேணுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: