சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

திருவாடானை: திருவாடானை ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தலைவர் இலக்கியா ராமு தலைமையில் தூய்மைப்பணி முகாமை வட்டாட்சியர் செந்தில்வேல் முருகன் துவக்கி வைத்தார். இந்த முகாம் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கி பேருந்து நிலையம் வழியாக தேரோடும் நான்கு வீதிகளையும் சுற்றி சன்னதித் தெரு வழியாக வந்தடைந்தனர். தூய்மைப்பணி விழிப்புணர்வு முகாமில் பாலித்தீன் பைகளை கடைகளில் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.இந்த முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜென்சிராணி, ஊராட்சி செயலர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக்காவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவரும் செல்லும் வழியில் கிடந்த பாலித்தீன் பைகளை சாக்குப்பைகளில் சேகரித்து ஊராட்சியில் ஒப்படைத்தனர்.அதன் பிறகு மங்களநாதன்குளம் அருகில் தலைவர் இலக்கியாராமு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

Related Stories: