அழகர்கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா

அழகர்கோவில்: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா நேற்று தொடங்கியது. வரும் 14ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. இதில் கள்ளழகர் பெருமாள், தேவி பூமிதேவியருடன் பல்லக்கில் புறப்பாடாகி மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கிளம்பினார். கோவில் யானை சுந்தரவல்லி முன்செல்ல அங்குள்ள ஆடி வீதி வழியாக பதினெட்டாம்படி கருப்பசாமியை அடைந்து வசந்த மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் பெருமாள் வந்த வழியாக திரும்பி சென்று இருப்பிடம் சேர்ந்தார். திருவிழாவின் 10 நாட்கள் தினமும் மாலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10ம் நாள் நிறைவு நாளில் விஷேச பூஜைகள் சாமிக்கு செய்யப்படுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் இராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: