சந்தானம் வித்யாலயா பள்ளியில் கோடைகால விளையாட்டு முகாம் நிறைவு விழா

திருச்சி, ஜூன்6: திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் கோடைகால விளையாட்டு முகாம் நிறைவுவிழா நேற்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாநகர கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட டேக்வாண்டோ கழக தலைவர் ஹரிஹரூன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பள்ளி செயலர் முனைவர் மீனா முன்னிலை வகித்தார். தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன், இயக்குநர் அபர்ணா ஆகியோர் தலைமை தாங்கினர்.

சிறப்பு விருந்தினர் கமிஷனர் கார்த்திகேயன் பேசுகையில், மாணவர்களையும், பெற்றோர்களையும் பாராட்டினார். தொடர்ந்து பயிற்சியுடன் சிறப்பாக படித்து விளையாடி வெற்றியை அடைய மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், பயிற்சியாளர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவித்தார். பள்ளியின் முதல்வர் முனைவர் பொற்செல்வி, டீன் கணேஷ், அகாதெமி இயக்குநர் ரவிந்தரநாத்குமார் மற்றும் ஸ்போர்ட்ஸ்லீப் இயக்குனர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் மூத்த முதல்வர் பத்மாசீனிவாசன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Related Stories: