துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை திருவாரூர் அருகே தென்ஓடாச்சேரியில் சாராய விற்பனையை தடுக்ககோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருவாரூர், ஜூன் 6: திருவாரூர் அருகே சாராய விற்பனையை செய்யக்கோரி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர் அருகே தென் ஓடாச்சேரி கிராமத்தில் வசித்து வரும் தந்தை, மகன் அந்த பகுதியில் தொடர்ந்து பாண்டி சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் பலமுறை வைப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் போலீசார் எவ்வத நடவடிக்கையும் எடுக்கவில்லை. தந்தை, மகன் இருவரும் தொடர்ந்து சாராய பாக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் சாராய பாக்கெட்டுகள் மூட்டையுடன் இருவரும் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை கண்ட கிராம மக்கள் இருவரையும் பிடிக்க முயன்றபோது இருவரும் தப்பித்து ஓடியதால் அந்த சாராய பாக்கெட் மூட்டைகளை எடுத்து வந்து நாகை திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் கானூர் என்ற இடத்தல் சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாராய வியாபாரிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: