×

கும்பகோணத்தில் அரியலூர் மகா மாரியம்மன் கோயில் பாலாபிஷேக விழா

கும்பகோணம், ஜூன் 6: கும்பகோணம் உப்புக்காரத்தெரு அரியலூர் மகா மாரியம்மன் கோயில் வைகாசி மாத வசந்த பாலாபிஷேக விழா நேற்று நடந்தது. திருவிழாவையொட்டி 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் சக்திவேல், சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி எடுத்து வந்தனர். கும்பகோணம் உப்புக்காரத்தெருவில் அரியலூர் மகா மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத வசந்த பாலாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 29ம் தேதி மாலை மகா மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கி, கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து வழிபாடு மற்றும் பூர்வாங்கத்துடன் காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை முக்கிய நிகழ்ச்சியாக ஆலயத்தில் இருந்து வேல் புறப்பட்டு, பகவத் படித்துறையிலிருந்து மேள கச்சேரியுடன் வாணவேடிக்கை, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் சக்திவேல், சக்தி கரகம், பால்குடம், காவடி புறப்பட்டு முக்கிய வீதி வழியாக கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து நேற்று மதியம் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது. மாலை மகா மாரியம்மன் தங்க கவச சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்து, அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்து மகா தீபாராதனை நடந்தது. இன்று இரவு அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா புறப்பாடும், நாளை மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்று, நாளை மறுநாள் சந்திர மகா காளியம்மன் ஆனந்த பிறந்த வீட்டார்கள் சீர்வரிசை எடுத்து வருதல் மற்றும் திருநடன வீதியுலா புறப்பாடும், 10ம் தேதி மாலை ஊஞ்சல் சேவை மற்றும் பூஜையும், 11ம் தேதி இரவு விடையாற்றியுடன் இவ்வாண்டிற்கான நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.

Tags : Ariyalur Maha Mariamman Temple Balabhishek Festival ,Kumbakonam ,
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்