அய்யம்பேட்டை அருகே வல்லப கருப்புசாமி கோயில் கும்பாபிஷேகம்

பாபநாசம், ஜூன்6:அய்யம்பேட்டை அருகே புத்தூர் மேற்கில் வல்லப கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.கோயிலின் திருப்பணிகள் நிறைவு பெற்று, சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றது. கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் மகாதீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: