×

பொன்னமராவதி அருகே கேசராப்பட்டியில் பொங்கல் விழா சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி, ஜூன் 6: பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் பொங்கல் விழா நடைபெற்றது. கேசராபட்டி பிடாரிஅம்மன் கோயிலில் இருந்து நேற்று முன்தினம் வழிபாடு செய்து பொங்கல் கூடை எடுத்து கண்டியாநத்தம் செல்வ விநாயகர் கோயில் முன்பு வைத்து பெரியகருப்பர் கோயில் மற்றும் விநாயகர் கோயிலில் வழிபாடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று கேசராபட்டி செல்வவிநாயகர் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
பின்னர் பிடாரி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு செய்யப்பட்டது. தூத்துக்காடஅய்யனார் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு சிறப்பு கொடுத்து வழிபாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நாடகம் நடைபெற்றது.

Tags : Pongal festival ,Kesarapatti ,Ponnamaravathi ,
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...