கந்தர்வகோட்டை பகுதியில் மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

கந்தர்வகோட்டை, ஜூன் 6: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் விவசாயிகள் தற்சமயம் விவசாயத்தை மும்முரமாக செய்து வருகிறார்கள். இதில் ஒரு பகுதியாக மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். தற்சமயம் மிளகாய்செடி காய் காய்க்க தொடங்கி உள்ளது. மிளகாய் செடி வைத்ததில் இருந்து அறுபது நாட்களில் மிளகாய் காய் காய்க்க தொடங்கி விடும் என்றும், பச்சை மிளகாய் கிலோ ஒன்று தற்சமயம் 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆகிறது என்றும், மிளகாயை செடியில் பழுக்கவிட்டால் குறைந்தபட்சம் பத்து கிலோ மிளகாய் பழம் காய்ந்தால் ஒரு கிலோ முதல் 1,200 கிராம் வரைதான் கிடைக்கும் என்றும், மிளகாய் பழுத்து விற்பதை விட பச்சையாக விற்பனை செய்து வந்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என்றும், இதேவேளை பச்சைமிளகாய் தேவை என்பது மக்களுக்கு குறைந்தபட்ச தேவையாக மட்டுமாகவே உள்ளது. மிளகாய் செடி வைத்ததில் இருந்து மூன்று மாதங்கள் கழித்து மிளகாய் பழங்களை பழுக்க விட்டு பழங்களை காய வைத்து இருப்பில் வைத்துக் கொள்ளலாம் எனவும், பச்சைமிளகாய் சில தினங்களில் கெட்டு விடும் எனவும் தெரிவிக்கின்றனர். தற்சமயம் பச்சை மிளகாய் கிலோ ஒன்று 200 முதல் 220 வரை விற்பனையாகிறது என்று கூறுகிறார்கள். தற்சமயம் மிளகாய் விலை என்பது கூடுதலாக இருப்பதால் விளைச்சல் நன்றாக இருந்தால் விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும் என கூறுகின்றனர்.

Related Stories: