மத்திய அரசு அங்கீகாரம் பெற்றபின் பல்லடம் பஸ் நிலையத்தில் நகராட்சி தலைவர் திடீர் ஆய்வு

பல்லடம்: பல்லடம் பஸ் நிலையத்தில் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பல்லடம் நகராட்சி அறிஞர் அண்ணா மத்திய பேருந்து நிலையத்திற்கு நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் (திமுக)வருகை தந்து பேருந்து நிலையத்தை சுற்றி பார்வையிட்டார். அப்போது ஓட்டலில் உணவு சமைக்க விறகு கொண்டு வந்து வைக்கப்பட்டு இருந்தது. அதிக மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில்  உள்ள ஓட்டலில் விறகு அடுப்பு பயன்படுத்தி தீவிபத்து நிகழ்ந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எரிவாயு சிலிண்டர் அடுப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். விறகு அடுப்பு பயன்படுத்தக்கூடாது என்று ஓட்டல் உரிமையாளரை அழைத்து அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து அம்மா உணவகத்தில் உணவின் தரம், ருசி ஆகியவற்றை ஆய்வு செய்தார். பேருந்து நிலையத்தில் பேருந்துக்கள் வந்து செல்லும் நேரம் குறித்து கால அட்டவணை பதாகை வைக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் விநாயகம், சுகாதார ஆய்வாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் மற்றும் கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள்,வார்டு செயலாளர்கள் இருந்தனர்.

Related Stories: