பல்லடம் நூலகருக்கு பாராட்டு விழா

பல்லடம்: பல்லடம் பஸ் நிலையம் அருகே கண்ணம்மாள் நினைவு கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த, 28 ஆண்டுகளாக நுாலகராக வேலை பார்த்து வரும் வேணுகோபால் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பல்லடம் ரோட்டரி சங்கம், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில், இவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் ராம். கண்ணையன், அரசு கல்லுாரி முதல்வர் முனியன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம், வாசகர் வட்ட தலைவர் யுவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் நுாலகர் ஜெயராஜ் நன்றி கூறினார்.

Related Stories: