ஆத்தூர் அருகே கொலையான தொழிலாளி மனைவிக்கு வருவாய்த்துறையில் பணி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

ஆறுமுகநேரி, ஜூன்4: ஆத்தூர் அருகே கொலையான உப்பளத்தொழிலாளியின் மனைவிக்கு வருவாய்த்துறையில் பணிக்கான ஆணையை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வழங்கினார். ஆத்தூர் அருகே தலைவன்வடலியை சேர்ந்த ராமசாமி மகன் சண்முகராஜ்(45). உப்பளத்தொழிலாளியான இவர் கடந்த 29ம் தேதி கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணத்தொகை ரூ.12லட்சத்தில் முதல்தவணையாக ரூ.6லட்சமும், அமைச்சரின் நிவாரண உதவியாக ரூ.5லட்சமும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொலையான சண்முகராஜின் மனைவி முத்துசந்தானத்திற்கு வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணையை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வழங்கினார்.

  நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெ. ஜெகன், முன்னாள் எம்எல்ஏ டேவின்செல்வின், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகானந்தம், மேலாத்தூர் பஞ். தலைவர் சதீஷ்குமார், துணைத்தலைவர் பக்கீர்முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: