ராணி அண்ணா கல்லூரியில் சபாநாயகர் அப்பாவு மரக்கன்று நட்டார்

நெல்லை, ஜூன் 4: முன்னாள் முதல்வர் கலைஞரின்  99வது பிறந்த நாளை முன்னிட்டு பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் தமிழக சபாநாயகர் அப்பாவு மரக்கன்று நட்டார். கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் நடந்தது. விழாவில் அப்துல்வகாப் எம்எல்ஏ, மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கலெக்டர் விஷ்ணு, வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர்  முன்னிலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு மரக்கன்று நட்டார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இதில் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் முருகன்,  ராணி அண்ணா மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி, வனச்சரக அலுவலர் சரவணக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: