×

வஉசி புகைப்பட கண்காட்சியை எப்எக்ஸ் கல்லூரி மாணவர்கள் பார்வை

நெல்லை, ஜூன் 4: வஉசி வாழ்க்கை வரலாறு நகரும் புகைப்பட கண்காட்சியை எப்எக்ஸ் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் கப்பலோட்டிய தமிழன் வஉசி.யின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு இடம்பெற்ற நகரும் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பேருந்தில் வஉசி சிறையில் செக்கிழுத்த செக்கு, அவரது வாழ்க்கை வரலாறு, விடுதலை போராட்டத்தில் அவரது பங்கு, ஆங்கிலேயருக்கு நிகராக  தூத்துக்குடி துறைமுகத்தில் அவர் கப்பல் போக்குவரத்தை தொடங்கியது குறித்த வரலாற்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கண்காட்சி பேருந்து, வண்ணார்பேட்டை எப்எக்ஸ் கல்லூரிக்கு வந்தது. இதனை கல்லூரியின் அனைத்து துறை  மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்  ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் சகாரியா கேபிரியேல் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : FX College ,
× RELATED தருவை எப்எக்ஸ் கல்லூரியில் 3 மாவட்ட கிரிக்கெட் போட்டி