வாழப்பாடி அருகே திரவுபதி அம்மன் கோயில் தேரோட்டம்

வாழப்பாடி, ஜூன் 4: வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர், திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா மற்றும் தேரோட்டம் நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 300 ஆண்டு பழமையான திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தேரோட்டம் மற்றும் தீமிதி விழா விமர்சையாக நடைபெற்றது.

தீமிதி திருவிழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் ராஜாமணி, பேரூராட்சி மன்றத் துணைத் தலைவரும், நகர திமுக செயலாளருமான வெங்கடேசன், கவுன்சிலர்கள், பொதுமக்கள் கோயில் நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, வடம் பிடித்து ேதரிழுத்தனர். தேரோட்டத்தையொட்டி, வாழப்பாடி டிஎஸ்பி தலைமையில் ஏத்தாப்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: