×

மாவட்டம் முழுவதும் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

நாமக்கல், ஜூன் 4: மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் 99வது பிறந்த தினம், நேற்று நாமக்கல் நகரில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அண்ணா சிலை அருகில் கருணாநிதியின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்துக்கு, ராமலிங்கம் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் நக்கீரன், மணிமாறன், தெற்கு நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த், நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, உறுப்பினர் தேவராஜன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கடல்அரசன், வார்டு செயலாளர்கள் செல்வமணி, பாஸ்கர், இளைஞர் அணி ரமணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, நாமக்கல் அரசு மருத்துவமனையில், கலைஞர் பிறந்தநாளையொட்டி ரத்த தான முகாமை ராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு, திமுக சார்பில் மாநில நிர்வாகி மணிமாறன் சர்க்கரை பொங்கல் வழங்கினார். நாமக்கல் கிழக்கு நகர பொறுப்பாளர் பூபதி, சேலம் ரோட்டில் ஏழைகளுக்கு நலஉதவிகள் வழங்கினார்.

சேந்தமங்கலம்:  சேந்தமங்கலம் ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதின் 99வது பிறந்தநாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். இதில் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு பேளுக்குறிச்சி, வெட்டுக்காடு காளப்ப நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம், சேந்தமங்கலம் பேரூராட்சியில் குப்பநாயக்கனூர், வள்ளுவர் நகர், பழைய பஸ் நிலையம், அக்கியம்பட்டி உள்ளிட்ட 24 இடங்களில், கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் தனபாலன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நல்லுராஜேந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி, ஒன்றியக்குழு தலைவர் மணிமாலா, துணைத்தலைவர் கீதா வெங்கடேஸ்வரன், ருக்குமணி, பாப்பு, முருகேசன், சரசு திராவிடமணி, சுபாஷினி கார்த்தி, விஜயகுமார், குணசேகரன், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட காடச்சநல்லூர், புதுப்பாளையம், ஓடப்பள்ளி, கொக்கராயன்பேட்டை, எலந்தகுட்டை உள்ளிட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கொடியேற்றி விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் யுவராஜ் கட்சி கொடியேற்றி வைத்தார். வெப்படையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர்கள் கார்த்தி ராஜ், ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரவிமோகன், இளங்கோவன், சுகுமார், ரமேஷ், ஜெயகோபி, சங்கீதா செந்தில்குமார், தனசேகரன், ஜெயமணி முருகேசன், தங்கராசு, ஷெரிப், ராதாகிருஷ்ணன், சம்பத், துரைராஜ் பெருமாள், தமிழரசு, ராகேஷ்கண்ணா, பெரியசாமி, சந்திரன், பாண்டியன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலம் கொடியேற்றி வைத்தார். துணை தலைவர் சின்னத்தம்பி, சம்பத்குமார், வடிவேல், கார்த்திக் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாதரை பேருந்து நிறுத்தம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை தாங்கினார்.

வெப்படை செல்வராஜ் இனிப்பு வழங்கினார். கட்சி நிர்வாகிகள் தளபதி செல்வம், கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், பழனிசாமி, அன்பழகன், கோவிந்த், கோபி, ரத்தினகுமார், முனியப்பன், மணிமேகலை, தங்கராசு, மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில், நகர செயலாளர் ரவிச்சந்திரன் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பேருந்து நிலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பால் ரொட்டிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் குளோப்ஜான், மாவட்ட பொருளாளர் குமார், நகரமன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், வினோத், யுவராஜ், அமுதா அங்கப்பன், குருசசி, யுவராஜ், சுதா வெண்ணிலா, மகேஸ்வரி செல்வம், மங்களம், ஜிம் செல்வம், சண்முகம், செல்வம், கார்த்திக்ராஜ், திருநாவுக்கரசு, நந்தபிரகாஷ், ரவீந்திரன், செல்வம், பெரியசாமி மற்றும் வார்டு செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags : Karunaniti ,
× RELATED ஹீரோவாக அறிமுகமாகும் ஹெல்த் இன்ஸ்பெக்டர்