குமரியில் மழை குறைந்தது

நாகர்கோவில், ஜூன் 4:  குமரியில் நேற்று மழை குறைந்தது.  கடந்த மே மாதம் அக்னி நட்சத்திரம் காலம் முழுமையாக வெயிலின் தாக்கம் இன்றி மழை பரவலாக பெய்து வந்தது.இதனால், முதன்முறையாக கோடையில், பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவை கடந்து மறுகால் திறந்து விடப்பட்டது. இதனால், நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் விவசாயிகள் இம்முறை மே மாதமே கன்னிப்பூ சாகுபடி பணிகளை தொடங்கி விட்டனர்.  

அணைகளில் நீர் இருப்பு  முழுகொள்ளளவை எட்டியுள்ளதால், இம்முறை விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ஜூன் 1ம் தேதி முதல் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு பின்னர் குமரியில் கடந்த இரு நாட்களாக மழை குறைந்துள்ளது. நேற்று வெயிலின் தாக்கம் நாகர்கோவிலில் சற்று அதிகரித்து காணப்பட்டது.  நேற்று முன்தினம், பேச்சிப்பாறை, சிற்றாறு  அணைப்பகுதிகளில் மட்டும் மிதமான மழை பெய்தது.  பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 15.8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. எனினும் கோதையாற்றில் இருந்து பேச்சிப்பாறைக்கு தண்ணீர் வரத்து அதிகம் உள்ளது.

Related Stories: