மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெரியகுளம், ஜூன் 4: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால், மஞ்சளாறு அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரியகுளம் அருகே 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணை உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், கடந்த இரண்டு மாதமாக அணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால், அணையின் நீர்மட்டம் அணையின் 37 அடியாக குறைந்தது.

இதனிடையே, கடந்த இரண்டு தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெருமாள் மலை, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு 58 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டமும் 39 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் இல்லை. இதனால், தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

Related Stories: