தேனி மாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தேனி, ஜூன் 4: முத்தமிழறிஞர் கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா தேனியில் மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் கொண்டாடப்பட்டது. தேனி நகர் நேரு சிலை அருகே நடந்த விழாவில், அலங்கரிக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏவான கே.எஸ்.சரவணக்குமார், தேனி அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுப்ரியா பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.

இதில், நகர்மன்றத் துணைத் தலைவர் வக்கீல்.செல்வம், கவுன்சிலர்கள் பாலமுருகன், நாராயணபாண்டியன், கடவுள், விஜயன், ராஜ்குமார், பிரிட்டீஸ், தினேஸ், அய்யனார்பிரபு, மணிகண்டன், பழனியம்மாள்சேகர், அனுசியா, கிருஸ்ணகுமாரி, இந்திராகாந்தி, நாகராணி, நகர திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், பண்ணைரவி, மகாராஜன், பவுன்ராஜ், நாகராஜ், சாதிக்பாட்சா, பிரசன்னா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

தேனி நகராட்சி 33வது வார்டான கருவேல்நாயக்கன்பட்டி திருவள்ளுவர் நகரில் புதிய ரேசன்கடையை தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ சரவணக்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும், இப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை 33 வது வார்டு கவுன்சிலர் கடவுள் செய்தார். இதில் நகர்மன்றத் தலைவர் ரேணுப்பிரியாபாலமுருகன், துணைத் தலைவர் வக்கீல.செல்வம், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: