சமூக நல அலுவலகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, ஜூன் 4: சிவகங்கை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம், சிவகங்கை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வன்முறையிலிருந்து பெண்களை காப்பதற்கான இந்திய அரசின் சிறப்புத் திட்டத்தின்(ஒன் ஸ்டாப் சென்டர்) கீழ் தொகுப்பூதியம் முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வழக்கு பணியாளர் பணிக்கு கல்வித் தகுதி இளநிலை பட்டம் (பிஎஸ்டபிள்யூ), முதுகலை பட்டம் (எம்எஸ்டபிள்யூ), குறைந்தபட்சம் 1 வருடம் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரியும் பணியில் அனுபவம் உள்ளவராகவும், ஆற்றுப்படுத்துதல் பணியில் 1 வருட அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். தங்கி பணி புரிபவராக இருக்க வேண்டும். 31.5.2022 அன்று குறைந்தபட்ச வயது 21, அதிகபட்சம் 35வயதிற்குள் இருக்க வேண்டும். மாத தொகுப்பூதியம் ரூ.15,000 வழங்கப்படும்.

காவலர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி 10ம் வகுப்பு, 1 ஆண்டு பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். தங்கி பணி புரிபவராக இருக்க வேண்டும். 31.5.2022 அன்று குறைந்தபட்ச வயது 21, அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத தொகுப்பூதியம் ரூ.10,000 வழங்கப்படும். பெண்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், நேரிலோ, தபால் மூலமாகவோ, விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், சிவகங்கை-630 561 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 10. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: