×

கல்லூரி ஆண்டு விழா

காரைக்குடி, ஜூன் 4: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் 14ம் ஆண்டு விழா நடந்தது. முதல்வர் சசிகுமார் வரவேற்றார். செயலாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இயக்குநர் உருமநாதன், பிளாசா கல்வி அறக்கட்டளை தலைவர் சோமசேகர், திருப்பத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கான்முகமது, கவுன்சிலர் சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர். 100 சதவீதம் வருகை பதிவு உள்ள மாணவர்கள் மற்றும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர் சந்தோஷ்தீபன் நன்றி கூறினார்.

Tags : College Annual Festival ,
× RELATED ஸ்ரீ துர்காதேவி பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா