காரைக்குடி, ஜூன் 4: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் கிராமிய பயிற்சி மையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மையம் துவக்க விழா நடந்தது. கிராமிய பயிற்சி மைய இயக்குநர் ஆறுமுகம் வரவேற்றார். கலெக்டர் மதுசூதன்ரெட்டி துவக்கி வைத்து பேசுகையில், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வினை எதிர்கொள்ள வசதியாக இப்பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. 45 நாட்கள் பயிற்சி நடத்தப்பட உள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர அரசு 7.5 சதவீதம் சிறப்பு இடஒதுக்கீட்டினை வழங்கியுள்ளது. இதன் மூலம் அதிகளவில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு உருவாகி உள்ளது.