×

திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கூடுதல் விடைத்தாள் வழங்க கூடாது சங்க தலைவர் வலியுறுத்தல்

சிவகங்கை, ஜூன் 4: தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் இளங்கோவன் அரசு தேர்வுகள் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில்: தமிழ்நாடு முழுவதும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். எனவே விடைத்தாள் திருத்தும் மையத்தில் போதுமான மேசை, நாற்காலி, மின் விசிறி, மின் விளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர வேண்டும்.

அரசு தேர்வுகள் துறையால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை அளவில் மட்டுமே விடைத்தாள் வழங்கப்பட வேண்டும். முகாமை விரைந்து முடிக்க வேண்டும் என்ற இலக்கோடு இறுதி நாட்களில் அதிகப்படியான விடைத்தாள்களை வழங்கக் கூடாது. திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை பாடவாரியாக இறுதி செய்து அதற்கேற்றவாறு விடைத்தாள்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகளால் மதிப்பெண் மாறுபட்டு ஆசிரியர்கள் துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளாகினர். எனவே அதுபோன்ற நிகழ்வுகள் இல்லாமல் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ காரணங்களுக்காக விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு கோரும் முதுநிலை ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவித்திட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : president ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!