×

கலைஞரின் பிறந்தநாளையொட்டி பரமக்குடியில் 99 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

பரமக்குடி, ஜூன் 4: பரமக்குடியில்  கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு,எம்எல்ஏ முருகேசன் தலைமையில் 99  கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்  தமிழக முன்னாள் முதல்வர், முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தலைமையில் சட்டமன்ற அலுவலகம்முன்பு 99 கிலோவில் உதயசூரியன், கலைஞரின் உருவம் பொறிக்கப்பட்டு மிகப்பிரமாண்டமாக  கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன்,பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் ராமநாதபுரம்  மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ கேக் வெட்டி விழாவினை தொடக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகர் கழகம்  சார்பாக காட்டுபரமக்குடி, பொன்னையாபுரம் பாரதி நகர், கிருஷ்ணா தியேட்டர், எமனேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

எம்எல்ஏ முருகேசன்  ஏற்பாட்டில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்களுக்கும்,  நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நயினார்கோவில் ஒன்றிய பகுதிகளில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சக்தி அண்ணாமலை ஆகியோர் தலைமையில்  சட்டமன்ற உறுப்பினர் திமுக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பரமக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் பாம்பூர் மேலாய்குடி உள்ளிட்ட பகுதிகளில் திமுக கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் கதிரவன் தலைமையில், போகலூர், சத்திரக்குடி, காமன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் திமுக கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன, ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் பொட்டிதட்டி மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில்,மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா,  பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் டி அருளானந்து, போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பூமிநாதன், போகலூர் ஒன்றிய பொருளாளர் குணசேகரன்,மாவட்ட அயலக அணி பொறுப்பாளர் பன்னீர்செல்வம், பரமக்குடி  நகர் வடக்கு  பொறுப்பாளர் ஜீவரத்தினம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிககள் கலந்து கொண்டனர்.

Tags : Paramakudi ,
× RELATED மகளை திருமணம் செய்து கொடுக்காததால்...