தமிழ் மன்றம் துவக்க விழா

திண்டுக்கல், ஜூன் 4: திண்டுக்கல் அருகே உள்ள ‌ஆர்விஎஸ் பொறியியல் மற்றும் ஆவிஎஸ் கல்வி குழுமத்தின் பெட்ரோ கெமிக்கல், சிவில் இன்ஜினியரிங் துறை சார்பில் தமிழ் மன்ற துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். இந்த விழாவில் எம்எஸ்பி சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ரெங்கநாதன் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். முன்னதாக இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முனைவர் சிவக்குமார் மற்றும் முனைவர் ராஜேஷ் கண்ணா செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் தேன்மொழி, தமிழ் மன்ற பொறுப்பாளர் நன்றியுரையாற்றினார்.

Related Stories: