ருத்ராபாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பு

உடுமலை, ஜூன் 4:  உடுமலை அருகே உள்ள கல்லாபுரம், ராமகுளம் பகுதியில் சுமார் 4200 ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடக்கிறது. இதில் 2500 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இங்கு 2ம் போக நெல் பயிரிட்ட விவசாயிகள் தற்போது அறுவடையை துவக்கியுள்ளனர். நெல்லை வழங்க வசதியாக அப்பகுதியில் அரசு நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை ஏற்று சங்கராமநல்லூர் பேரூராட்சி ருத்ராபாளையத்தில் நெல் கொள்முதல் மையம் அமைக்க அரசு உத்தரவிட்டது. இதனை, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜெயராமகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சாகுல்அமீது மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: