15 வேலம்பாளையம் பகுதி திமுக சார்பில் கலைஞரின் பிறந்தநாளையொட்டி 2 இடங்களில் அன்னதானம்

திருப்பூர், ஜூன் 4:  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, ஆத்துப்பாளையம் மற்றும் வேலம்பாளையத்தில் அன்னதானம் நடைபெற உள்ளது. திமுக 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி, திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜ் அறிவுறுத்தலின் பேரிலும், மேயர் தினேஷ்குமார் வழிகாட்டுதலின்படியும் இன்று (4ம் தேதி) 15 வேலம்பாளையம் பகுதி முழுவதும் ஆங்காங்கே கழக கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், ஏழை, எளியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியவர், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர், நலிந்த கழகத்தினர் என அனைத்து மக்களுக்கும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் ஆத்துப்பாளையம் மற்றும் வேலம்பாளையம் பகுதிகளில் மதியம் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதில், எம்எல்ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைக்கின்றனர். எனவே, மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: