×

தும்மனட்டி ஊராட்சியில் வீட்டு வரி உயர்வு

ஊட்டி, ஜூன் 4: தும்மனட்டி ஊராட்சியில் வீட்டு வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தும்மனட்டி ஊராட்சி தலைவர் சுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தும்மனட்டி ஊராட்சியில் வீட்டு வசதி வரி ஆண்டிற்கு ஒரு முறை திருத்தி அமைப்பது தொடர்பாக  தொடர்பான கூட்டம் நடந்தது.

இதில், 2022-24ம் ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் வீட்டு வரி வசூலிக்கப்பட்டதில் இருந்து 50 சதவீதம் உயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் காலங்களில் வீட்டு வரி வசூலிக்கப்படும். இதற்கான தீர்மானம் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி நடந்த கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.  இவ்வாறு தலைவர் சுமதி தெரிவித்துள்ளார்.

Tags : Tummanatti ,
× RELATED தும்மனட்டி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி