×

கே.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலத்துக்கு ‘மருத்துவ மாமனிதர்’ விருது

கோவை, ஜூன் 4:  கோவை கே.ஜி மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகள் சார்பில், மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலத்தின் மருத்துவ சேவையை பாராட்டி, ‘மருத்துவ மாமனிதர்’ விருது வழங்கும் விழா, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலையரங்கில் நேற்று நடந்தது. அவசர சிகிச்சை பிரிவு செவிலியர் கீர்த்தனா வரவேற்றார். செவிலியர்கள் கோமதி, சூர்யா, பூஜா, விக்னேஸ்வரி, அபிநயா, கீர்த்திகா ஆகியோர் இணைந்து, டாக்டர் பக்தவத்சலத்துக்கு இவ்விருதை வழங்கினர்.

பின்னர், டாக்டர் பக்தவத்சலம் பேசியதாவது: செவிலியர்களின் பணி, மிகவும் மகத்தானது. எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு, ஒவ்வொரு செவிலியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகிறார்கள். செவிலியர்களை, என்றும் ‘’தேவதைகள்’’ என்றே நான் அழைப்பேன். சாலைவிபத்தில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட சிகிச்சைக்கு வரும் நபர்கள், தற்கொலை முயற்சி செய்து, உயிருக்கு போராடிய நிலையில் வரும் நபர்கள், வயது முதிர்வு காரணமாக உயிருக்கு போராடும் நபர்கள் என பல விதமான நோயாளிகளுக்கு இந்த செவிலியர்கள், மகத்தான சேவை செய்கிறார்கள்.

 இச்சேவையை, நோயாளிகளின் உடன்பிறந்தவர்களால்கூட செய்ய முடியாது. அந்த அளவுக்கு மிக பொறுமையாக நோயாளிகளை கையாண்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மனம் நோகாமல் செய்து முடிக்கும் இவர்களை பாராட்ட வார்த்தையே இல்லை. நான், செவிலியர் ஆகவேண்டும் என பலர் நினைத்தாலும் அது முடியாது. இந்த பணியை, இவருக்குத்தான் கொடுக்கவேண்டும் என்பது அந்த இறைவனின் முடிவு. அதுவே இறுதியானது. அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றும் செவிலியர்களுக்கு என்றும் நல்லதே நடக்கும். இதுவே, இறைவனிடம் நான் வேண்டும் பிரார்த்தனை. இவ்வாறு டாக்டர் பக்தவத்சலம் பேசினார்.

Tags : K.G. Hospital ,President ,Dr. ,Bhagwatsala ,
× RELATED டாக்டர் அகர்வால்ஸ் கண்...