×

தோட்ட தொழிலாளர் பிரதிநிதி தேர்தலில் அதிமுகவினர் வெற்றி

கோவை, ஜூன் 4:  கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் நடந்த தொழிலாளர் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் அதிமுக தொழிற்சங்கம் சார்பில் போட்டியிட்ட 5 தொழிலாளர்கள் வெற்றிபெற்றனர். பாரளை மற்றும் லோயர்பாரளை எஸ்டேட் பகுதிகளை சேர்ந்த பிரான்சிஸ், தங்கம்மாள், ராமன், பழனியம்மாள், பன்னிமேடு எஸ்டேட் முப்புடாதி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இவர்கள் அனைவரும் வால்பாறையில் உள்ள அதிமுக தொழிற்சங்க அலுவலகத்தில், தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீதுவுக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து பெற்றனர். தொழிலாளர்களின் நலனுக்காகவும், தொழிற்சங்கத்தின் நலனுக்காகவும் உழைக்க வேண்டும் என தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது, வெற்றியாளர்களுக்கு அறிவுரை வழங்கி, வாழ்த்தினார்.

Tags : AIADMK ,workers' representative ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...