×

சர்க்கார் விரைவு ரயிலில் 10 கிலோ கஞ்சா சிக்கியது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வந்த, சர்க்கார் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் புறப்பட்டு, தினசரி சர்க்கார் விரைவு ரயில் காலையில் செங்கல்பட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில், ஆந்திராவில் இருந்து நேற்று காலை சர்க்கார் விரைவு ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்தது. இதில், கஞ்சா கடத்தி வரப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர்  ராமதாஸ் தலைமையில் போலீசார் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பெட்டியில் கிடந்த 2 தோல் பைகளில் 5 பண்டல்களாக  10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. ரயில்வே போலீசார் அதனை கைப்பிற்றி, காஞ்சிபுரம் போதை தடுப்புப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, அவர்கள் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Sarkar ,
× RELATED திருவெறும்பூர் அருகே வாகன விபத்தில் 4 பேர் காயம்