×

வயலூர் முருகன் ேகாயிலில் வைகாசி விசாக திருவிழா

திருச்சி, ஜூன் 3: திருச்சி மாவட்டம் ரங்கம் தாலுகா குமாரவயலூரில் அருணகிரிநதாரால் பாடல்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூன் 14ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் இரவு 8 மணிக்கு தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடைபெறும். இத்திருநாட்களில் ஒன்பதாம் திருநாளான ஜூன் 11ம் தேதி காலை 10.30-11.30 மணிக்குள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி ரதாரோகணமும், மாலை 4 மணிக்கு தேரோட்ட விழாவும் நடைபெறும். ஜூன் 12ம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். மேலும் பக்தர்கள் பால்காவடி, அலகு குத்திக்கொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் சிறப்புடன் நடைபெற உள்ளது. ஜூன் 13ம் தேதி மாலை 6 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. ஜூன் 14ம் தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்கு விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், கோயில் தக்கார் உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Vaikasi Visakha Festival ,Vayalur Murugan Temple ,
× RELATED ரூ.5 கோடி செலவில் வயலூர் முருகன்...