அரியலூர் மாவட்டத்தில் ரூ.4.47 கோடியில் வளர்ச்சித் திட்ட பணிகள்

அரியலூர், ஜூன் 3: அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ரமண சரஸ்வதி. ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம் நகராட்சியில் ரூ.75 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கழுவந்தோண்டியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் கழுவந்தோண்டி-பெரியவளையம் சாலை மேம்பாட்டுத் திட்டப்பணிகள், நெடுஞ்சாலைத் துறை- நபார்டு மற்றும் கிராம சாலைக் கோட்டம் சார்பில் நபார்டு வங்கியின் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் மணக்கரை-பிராஞ்சேரி சாலையில் ரூ.322.20 லட்சம பாலம் கட்டும் பணியினையும் என மொத்தம் ரூ.4 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து, நடைபெறும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், மாவ ட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், துணை இயக்குநர் கீதாராணி, ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி, துணைத்தலைவர் கருணாநிதி, நகராட்சி பொறியாளர் சித்ரா மற்றும் அரசு அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: