அரியலூரில் மாவட்ட திமுக கூட்டம் அரியலூர், ஜூன் 3: அரியலூரில் மாவட்ட திமுக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திமுக சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ., கா.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தீர்மானங்களை விளக்கி அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை நிறுவியதற்கும், அவரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதலவருக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையை இந்த ஆண்டு மே 24ம் தேதியே திறந்து விட்ட முதல்வருக்கு இக்கூட்டம் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது என்றார். கூட்டத்தில் கொள் கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, தலைமை கழக பேச்சாளர்கள் இளஞ்செழியநன், குமார், வழக்கறிஞர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: