×

₹56 லட்சம் மதிப்பில் நாமக்கல், ராசிபுரத்தில் உழவர் சந்தைகள் புனரமைப்பு


நாமக்கல், ஜூன் 3: நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர், நாமக்கல் மற்றும் மோகனூர் ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதிநிலை அறிக்கையில் உழவர் சந்தைகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து நாமக்கல், ராசிபுரம் உழவர் சந்தைகள் ₹56.76 லட்சத்தில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் உழவர் சந்தையில், விவசாயிகளுக்கு இதுவரை மொத்தம் 1,455 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகள் மூலமாக கடந்த ஓராண்டில் 1,06,914 விவசாயிகள் உற்பத்தி செய்த 17,663 மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் இடைத்தரகர்கள் குறுக்கீடு இன்றி, நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் அடுத்த பெரியசந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்திரா கூறுகையில், ‘பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறி விற்பனை செய்கிறோம். எங்களுக்கும் நியாயமான விலை கிடைக்கிறது.
முதல்வர் மு.க ஸ்டாலின் உழவர்சந்தை கட்டிடங்களை புனரமைத்து கொடுத்துள்ளார். விவசாயத்தில் எங்களுக்கு நேரடியாக லாபம் கிடைக்க வேண்டும் என்று தான், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உழவர் சந்தைகளை ஏற்படுத்தினார். சந்தைகள் நல்லமுறையில் செயல்பட முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு முதல்வருக்கு நன்றி,’ என்றார். கோடங்கிப்பட்டியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம் கூறுகையில்,    ‘இரண்டரை ஏக்கரில் காய்கறி போட்டுள்ளோம். தினமும் உழவர் சந்தைக்கு காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்கிறேன். உழவர் சந்தைகளை புனரமைத்து கொடுத்தற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி,’ என்றார்.

Tags : Namakkal ,Rasipuram ,
× RELATED ராசிபுரம் அருகே ரூ.7 கோடி மதிப்பிலான...