கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி கூட்டம்

தர்மபுரி, ஜூன் 3: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் வரவேற்றார். இக்கூட்டத்தில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் தங்கமணி, முத்துக்குமார், ஜெயக்குமார், கலைச்செல்வன், சரவணக்குமார், வின்னரசன், பெருமாள், சரவணன், நடேசன், தாமோதரன், நவீன்குமார், மாரியப்பன், முருகன், சிவகுரு மாரியப்பன், விஜயன், சரவணன், பெருமாள், வெங்கட்ராமன், ஏலகிரி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை இன்று (3ம் தேதி) மாணவர் அணியின் சார்பில் கொண்டாடுவது. ஏழை எளியோருக்கும், இல்லாதோருக்கும் அன்னதானம், பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், பொதுமக்களுக்கு இனிப்பு ஆகியவற்றை வழங்கியும், புதியதாக மரக்கன்றுகளை நட்டும், சீரும் சிறப்புமாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. திமுக மாணவர் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: