புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் விளையாட்டுத்திடல் பணி: பரந்தாமன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பெரம்பூர்: புளியந்தோப்பு கே.பி.பார்க் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில், மாநகராட்சி சார்பில் ரூ.1.31 கோடியில் விளையாட்டு திடல் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ. பரந்தாமன் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் புதிதாக உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கும் என எம்எல்ஏ இ.பரந்தாமன் தெரிவித்தார்.

Related Stories: