×

பரமக்குடியில் ஜமாபந்தி

பரமக்குடி: பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 1ம் தேதி துவங்கியது. இது வரும் 10ம் தேதி வரை கோட்டாட்சியர் முருகன் தலைமையில் நடைபெறகிறது. இதில் பரமக்குடி தாலுகா பகுதியில் உள்ள வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை கோட்டாட்சியரிடம் கொடுத்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பட்டா, பட்டா மாறுதல், விதவைச் சான்று, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படும்.இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் பார்த்திபனூர் உள்வட்ட 18 வருவாய் கிராமங்களுக்கான கணக்குகள் சரி பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 22 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து பரமக்குடி நகர் மஞ்சூர், நைனார் கோவில்,போகலூர் கிளியூர் உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்கள் தவிர வட்டங்களுக்கு தொடர்ந்து 10ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தமிம் ராஜா, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் பரமசிவம், துணை தாசில்தார் சடையாண்டி முதன்மை இடத்தை தாசில்தார் காதர் முகைதீன், வருவாய் ஆய்வாளர்கள் பால்பாண்டி, கருப்புசாமி, பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலர் ஆண்டி, பரமக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Jamabandi ,Paramakudi ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு