×

திருப்புல்லாணி அருகே எருதுகட்டில் 250 வீரர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம்: திருப்புல்லாணி அருகே அய்யனார் கோயில் சமத்துவ எருதுகட்டு விழாவில் திமிறிய காளைகளை, இளைஞர்கள் அடக்கினர். திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி பொக்கனாரேந்தல் சாத்துடையார் மலைமேல் அய்யனார் கோயில் எருது கட்டு விழா நேற்று நடந்தது. எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். யூனியன் தலைவர்கள் புல்லாணி, பிரபாகரன், ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், மாவட்ட ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, வடமாடு உரிமையாளர்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், புதுக்கோட்டை,சிவகங்கை உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட காளைகள், 250 காளையர் பங்கேற்றன. துள்ளி குதித்து திமிறிய காளைகளை வீரர்கள் அடக்கினர். கோயிலுக்கு பாத்தியப்பட்ட பொக்கனாரேந்தல், பள்ளபச்சேரி, தாதனேந்தல், முத்துவீரப்பன்வலசை, கைக்கோளர் மடம், திருப்புல்லாணி, பால்கரை, ஆர்.எஸ்.மடை, வீரன்வலசை, கோவிந்தனேந்தல், அம்மன் கோவில், அச்சடிபி ரம்பு, ஆனைகுடி, குமுக்கோட்டை, சிவஞானபுரம், களரி, ராமநாதபுரம் இந்திரா நகர், திருப்புல்லாணி இந்திரா நகர், கே.கொடிக்குளம், கங்கைகொண்டான், வெண்குளம், வன்னிக்குடி, வித்தானூர்,வள்ளிமாடன் வலசை, ஆர்.காவனூர், சுமைதாங்கி, சீதக்காதி நகர், உத்தரவை, சேதுக்கரை, மோர்க்குளம் கிராம பொறுப்பாளர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, வடமாடு, உரிமையாளர்கள் நலச்சங்க பொறுப்பாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.

Tags : Thirupullani ,
× RELATED பதநீர் சீசனால் கருப்பட்டி தயாரிப்பு பணி துவக்கம்