×

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி அங்கன்வாடியில் முருங்கை நடவு செய்யும் பணி கலெக்டர் துவக்கி வைத்தார்

திண்டுக்கல்:திண்டுக்கல்  செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி, அங்கன்வாடி மையத்தில் முருங்கை நடவு  செய்யும் பணியை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர்  கூறியதாவது: ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிந்து, மருத்துவ  பரிசோதனை, தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.  இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, மருத்துவ சிகிச்சை  தேவைப்படும் குழந்தைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. மாவட்டத்தில்  அங்கன்வாடி மையங்களில் ஒரு லட்சத்து 39 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். இதில்  கிட்டத்தட்ட 32 ஆயிரம் குழந்தைகள் மருத்துவ பரிசோதனை, ஊட்டச்சத்து  குறைபாடுள்ள குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளது.இதில் 27 ஆயிரம் குழந்தைகள்  மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளாகவும், 7,700 குழந்தைகள்  கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, மருத்துவ பரிசோதனை வேண்டிய குழந்தைகளாகவும்  கண்டறியப்பட்டுள்ளன. இக்குழந்தைகளுக்கு மருத்துவ துறையின் மூலம் உடனடியாக  மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சைகள், அறுவை சிகிச்சை அளிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக குழந்தைகளுக்கு  முருங்கை கீரை, முருங்கை சூப் என சத்துக்கள் நிறைந்த உணவுகள் வழங்கும்  வகையில் அங்கன்வாடி மையங்களில் முருங்கை நடவு செய்து, பராமரிக்க  திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அங்கன்வாடி மையங்களில் முருங்கை நடவு  செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது’ என்றார். இதில் டிஆர்ஓ லதா, பிடிஓக்கள்  மலரவன், கிருஷ்ணன், ஊராட்சி தலைவர் லதா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Chettinayakkanpatti ,Anganwadi ,Dindigul ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...