மஞ்சூர் மின் வாரிய முகாமில் நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை

ஊட்டி: மஞ்சூரில் மின் வாரிய முகாமில் நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஊட்டியில்  நடந்த நீதி மன்ற திறப்பு விழாவில் அமைச்சர் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன்  பேசியதாவது: ஊட்டியில் பாரம்பரியமிக்க கட்டிடத்தில் நீதிமன்றம் இயங்கி  வருகிறது. இந்த இடம் போதுமானதாக இல்லா நிலையில், தமிழக அரசு ஒருங்கிணைந்த  நீதிமன்றம் அமைக்க காக்காதோப்பு பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்தது. தற்போது  இங்கு நீதிமன்றம் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்லும் சாலை  வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், நீதிமன்றத்திற்கு செல்லும் சாலை  அமைக்க தடையில்லா சான்று பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி  மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நீதிமன்றங்கள் சொந்த கட்டிடங்களில்  அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குந்தா தாலூகாவிற்குட்பட்ட  மஞ்சூரில் இதுவரை நீதிமன்றம் அமைக்கப்படாமல் உள்ளது. இதற்கான நிலம் தேடும்  பணிகள் நடந்து வருகிறது. குந்தா மின் வாரியத்திற்குட்பட்ட பகுதியில் இரு  கட்டிடங்கள் உள்ளது. இப்பகுதியில் நிரந்தர நீதிமன்றம் அமைக்க நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும். இதற்காக, மின்வாரியத்துறை அமைச்சரிடம் பேச்சு வார்த்தை  நடத்தப்படும். அதேபோல், குன்னூரிலும் நிரந்தர கட்டிடுவதற்கு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும், என்றார்.

Related Stories: