மின்சார வாரிய குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை: நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பின்வரும் கோட்ட அலுவலகங்களில் ஜூன் மாதம் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பகல் 11 மணியளவில் மின்சார வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜன்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2022 ஜூன் மாதத்தில் நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அலுவலகங்களில் முறையே வள்ளியூரில் ஜூன் 3ல் முதல் வெள்ளிக்கிழமை, சங்கரன்கோவிலில் ஜூன் 7ல் முதல் செவ்வாய்கிழமை, நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்தில் ஜூன் 10ல் 2வது வெள்ளிக்கிழமை, கடையநல்லூரில் ஜூன் 14ல் 2வது செவ்வாய்கிழமை, நெல்லை நகர்ப்புற கோட்ட அலுவலகத்தில் ஜூன் 17ல் 3வது வெள்ளிக்கிழமை, தென்காசியில் ஜூன் 21ல் 3வது செவ்வாய்கிழமை, கல்லிடைக்குறிச்சியில் ஜூன் 28ல் 4வது செவ்வாய்கிழமை ஆகிய நாட்களில் பகல் 11 மணியளவில் மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

Related Stories: