×

நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி இன்று துவக்கம்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகா அலுவலகங்களிலும் வருவாய் கணக்குகள் சரி பார்க்கும் பணி (ஜமாபந்தி) இன்று (3ம் தேதி) துவங்குகிறது.  இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு கூறுகையில் ‘‘நெல்லை மாவட்டத்தில் வருவாய் கணக்குகள் சரி பார்க்கும் பணி (ஜமாபந்தி) ஜூன் 3ம் தேதி துவங்குகிறது. நெல்லை தாலுகாவில் கலெக்டர் விஷ்ணு, ராதாபுரம் தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், பாளை. தாலுகாவில் நெல்லை ஆர்டிஓ சந்திரசேகர், நாங்குநேரி தாலுகாவில் சேரன்மகாதேவி ஆர்டிஓ, மானூர் தாலுகாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், திசையன்விளை தாலுகாவில் ஆய்வுக்குழு அலுவலர் மூர்த்தி, அம்பை. தாலுகாவில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் குமாரதாஸ், சேரன்மகாதேவி தாலுகாவில் வருவாய் நீதிமன்ற துணை கலெக்டர் ஆகியோர் வருவாய் கணக்குகளை சரி பார்க்கின்றனர். ஜூன் 3ம் தேதி தொடங்கும் ஜமாபந்தி 14ம் தேதி நிறைவு பெறுகிறது.நெல்லை தாலுகாவில் மதவக்குறிச்சி  கிராமத்திற்கு ஜூன் 3 மற்றும் 7ம் தேதியும், நாரணம்மாள்புரம்  கிராமத்திற்கு ஜூன் 7, 8 ஆகிய தேதிகளிலும்,  நெல்லை கிராமத்திற்கு ஜூன் 9, 10 தேதிகளிலும், கங்கைகொண்டான் கிராமத்திற்கு ஜூன் 14ம் தேதியும் கணக்குகள் சரிபார்க்கப்படுகிறது.  பாளை. தாலுகாவில் மேலப்பாட்டம்  கிராமத்திற்கு ஜூன் 3 மற்றும் 7ம் தேதிகளிலும், முன்னீர்பள்ளம் கிராமத்திற்கு ஜூன் 8, 9ம் தேதிகளிலும், சிவந்திப்பட்டிக்கு ஜூன் 9ம் தேதியும், பாளையங்கோட்டை கிராமத்திற்கு ஜூன் 10 மற்றும் 14ம் தேதிகளிலும் கிராம கணக்குகள் சரிபார்க்கப்படுகிறது.வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்கள் தங்கள்  கோரிக்கை மனுக்களை தங்களது கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நாளில் வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் அளித்து பயன் பெறலாம்’’ என்றார்.

Tags : Jamabandi ,Nellai ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!