×

காரியாபட்டி பேரூராட்சி கூட்டம்

காரியாபட்டி: காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சில் கூட்டம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் செந்தில் தலைமை வகித்தார். துணை சேர்மன் ரூபிசந்தோசம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திமுக பேரூராட்சி கவுன்சிலர்கள் வியக்கத்அலி, முனீஸ்வரி, முகமதுமுஸ்தபா, சங்கரேஸ்வரன், வசந்தா, நாகஜோதி, சரஸ்வதி, தீபா, செல்வராஜ், முத்துக்குமார், அதிமுக கவுன்சிலர்கள் ராமதாஸ், சத்தியபாமா, திருக்குமாரி உட்பட அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.காரியாபட்டி பேரூராட்சி அனைத்து வார்டுகளிலும் குடிநீர், தெருவிளக்கு, வாறுகால், சாலை வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காரியாபட்டியில் பெரும்பான்மையான வார்டு மக்கள் பயன்படுத்தும் செவல்பட்டி பொதுமயானத்தை மின்மயானமாக மாற்ற தொகுதி எம்எல்ஏவும் தொழில் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் மின்மயானம் ரூ.1.38 கோடி நிதியில் அமைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது என பேரூராட்சி சேர்மன் செந்தில் தெரிவித்தார். கூட்டத்தில் சொத்துவரி மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Kariyapatti Municipality Meeting ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ