×

ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள்

காரைக்குடி, : காரைக்குடி வட்டாசியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. வட்டாசியர் மாணிக்கவாசகம் வரவேற்றார். தேவகோட்டை வருவாய் கோட்டாசியர் பிரபாகரன் தலைமை வகித்தார். சாக்கோட்டை பிர்காவிற்கு நடந்த ஜமாபந்தியில் கிராம கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது. 55 மனுக்கள் வந்ததில் உடனடியாக 4 நபர்களுக்கு பட்டா மாறுதல், 3 நபர்களுக்கு கணினி திருத்த உத்தரவு, ஒருவருக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.நேற்று கல்லல் வருவாய் பிரிகாவிற்கும், இன்று காரைக்குடி, நாளை பள்ளத்தூர், 4ம் தேதி மித்திராவயல் பிரிக்காவிற்கும் ஜமாபந்தி நடக்கவுள்ளது. இதில் பட்டாமாறுதல், கணினி திருத்த மனு, முதியோர் உதவி தொகை மனு அளிக்கலாம். மண்டல துணை வட்டாசியர் முபாரக் உசேன், தலைமை நில அளவர் பிச்சுமணி, வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் விஏஓ கள் கலந்து கொண்டனர்.



Tags : Jamabandhi ,
× RELATED திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கியில் ஜமாபந்தி துவக்கம்