கீழக்கரை நகராட்சி கூட்டம்

கீழக்கரை:  கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் 38 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் இந்துக்கள் மயானக் கரையில் மின் மயானம் ரூ.1 கோடியே 41 லட்சம் செலவில் அமைப்பது குறித்து தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு இருந்ததை தொடர்ந்து அத்தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய்களை பழுது நீக்கி குடிநீர் வழங்குவது குறித்தும், பேவர் பிளாக் இல்லாத இடங்களில் புதிய பேவர் பிளாக் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. கீழக்கரை நகர்மன்ற கூட்டத்தில் கடந்த மாதத்தில் 460 தெருநாய்கள் பிடித்ததாகவும், அதற்கான செலவானது 3 லட்சத்து 22 ஆயிரம் என கணக்கு காட்டப்பட்டுள்ளது. இது குறித்து உரிய விசாரணை வேண்டும் என துணைச் சேர்மன் கேள்வி எழுப்பினார்.

Related Stories: